அமைச்சர்கள் தங்கள் பணத்தை எங்கே எப்போது மாற்றினார்கள்?

0

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பா.ஜ.க அறிவித்ததன் பின்னர் தங்களது பணத்தை வங்கியில் செலுத்தவும் பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்றவும் நாடு முழுவதும் பொதுமக்கள் அனைத்து வங்கிகளின் வாசலிலும் வரிசையில் நின்று பல சிரமங்களுக்கு உள்ளானார்கள். இதில் பலரின் உயிர் பறிபோனது வேதனைக்குரிய செயல். இப்படி இருக்க நம் அமைச்சர்கள் தங்கள் கையிருப்பு பணத்தை எங்கே எப்போது மாற்றினார்கள் அல்லது வங்கியில் செலுத்தினார்கள் என்பது கேள்விக்குறியே.

காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தியை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வங்கி வாசலில் தங்களது பணத்ததை மாற்றவோ அல்லது தங்களது பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தவோ வரிசையில் நிற்கவில்லை.

நம் நாட்டில் அமைச்சர்களின் நடத்தை விதிப்படி (Code of Conduct) அனைத்து அமைச்சர்களும் தங்களின் சொத்து விபரங்களையும், தங்கள் வங்கியின் இருப்பு நிலையையும் மேலும் தங்களின் கையிருப்பு பணத்தையும் அரசிற்கு தெரியபப்டுத்த வேண்டும். மேலும் லோக்சபா மற்றும் ராஜிய சபா உறுப்பினர்களும் தங்களது சொத்து விபரங்களை 1951 மக்கள் பிரதிநிதி சட்டத்தின் 75A பிரிவின் கீழ் அறிவிக்கக் வேண்டும். இவற்றை அரசு தானே முன் வந்து வெளியிடும்.

இதன் படி அமைச்சர்களின் கையிருப்பில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வாறு மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 2.5 ரூபாய்களுக்கு மேல் ஒரே தவனையிலோ அல்லது பல்வேறு தவணைகளிலோ பணம் வரவு வைத்தால் அவர்கள் மீது வருமான வரித்துறை விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் அந்த பணத்திற்கான தகுந்த ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்றும் அரசு கூறியிருந்த வேலையில் இதே விதி முறைகள் அமைச்சர்களுக்கும் கடைபிடிக்கபப்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

2016 மார்ச் மாதம் அமைச்சர்களின் சொத்து விபரம் மற்றும் கையிருப்பு பணம் குறித்து அறிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்களில் கையிருப்புப் பணம் அதிகளவில் வைத்திருப்பவர் நம் நாட்டு நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஆவர். இவரது கையிருப்பு பணம் சுமார் 65 லட்ச ரூபாய் என அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ், ராஹா மோகன் சிங், ராவ் இந்திரஜித் சிங், ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக், பியுஷ் கோஷல், ஓய்வு பெற்ற ஜெனெரல் வி.கே.சிங், ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், ஹரிபாய் பிரதிபாய் சவுத்தரி, ஸ்மிர்த்தி இராணி உள்ளிட்ட பல அமைச்சர்கள் தங்களது கையிருப்புப் பணமாக 2.5 லட்சத்திற்கும் மேலாக வைத்திருந்ததாக அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சில அமைச்சர்களின் கையிருப்பு பணம் குறித்த எந்த ஒரு தகவலும் அந்த அறிவிப்பில் இல்லை.

அமைச்சர்களின் சொத்து விபர பட்டியல்
(சிகப்பு நிறத்தில் குறிக்கப்பட்டவை 2.5 லட்சத்திற்கு அதிகமான தொகை)
screen-shot-2016-12-02-at-14-47-49

screen-shot-2016-12-02-at-14-48-08

screen-shot-2016-12-02-at-14-49-19

 

screen-shot-2016-12-02-at-14-49-59

screen-shot-2016-12-02-at-14-50-37

screen-shot-2016-12-02-at-14-51-20

 

Comments are closed.