அமைச்சர் ஸ்மிரிதி இராணி கைது செய்யப்படுவாரா?

0

போலி கல்விச் சான்றிதழ் வழக்கில் டெல்லி அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலி கல்விச் சான்றிதழை சமர்ப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர் நேற்று (ஜூன் 9) கைது செய்யப்பட்டார். தோமர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தோமர் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் செயல் என்று டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, ‘தோமர் கைது செய்யப்பட்டால் இராணி ஏன் கைது செய்யப்படக் கூடாது?’ என்ற கேள்வியை பொதுமக்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களில் எழுப்பியுள்ளனர். 2004ல் டெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிரிதி இராணி, 1996ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் தான் பி.ஏ. பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டவர், பி.காம். பார்ட் 1, ஸ்கூல் ஆஃப் ஓபன் லேர்னிங் என்று குறிப்பிட்டிருந்தார்.
இருவேறு தகவல்களை வழங்கிய இராணி ஏன் கைது செய்யப்படக்கூடாது என்பதுதான் தற்போதைய கேள்வி. இராணி மீதான வழக்கு ஜூன் 24ல் டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.