அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா முஸ்லிம் உலகம் மீது வீசிய குண்டுகள்

0

2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா தலைமையிலான அரசு இஸ்லாமிய உலகம் மீது தனது ஆட்சிக்காலத்தில் 26,171 குண்டுகளை வீசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தன்னை மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் காப்பகன் என்று உலகிற்கு காட்டிக்கொள்ளும் அமெரிக்கா நிஜத்தில் அதனை மீறும் முதல் நாடாக இருப்பது உலகறிந்ததே. உலகில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் அமெரிக்க தலைமையிலான படைகள் அமைதியை குலைத்த நாடுகள் ஏராளம்.

அந்த வகையில் தற்போது தனது பதவிக்காலம் முடிந்து வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தை விட்டு வெளியேறும் ஒபாமா, தனது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் நாடுகளான சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான், லிபியா, ஏமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 26,171 குண்டுகளை வீசியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு அமெரிக்க பிற நாடுகள் மீது வீசிய குண்டுகளை விட 3027 எண்ணிக்கை கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை Council on Foreign Relations என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த 26,171 குண்டுகளில் அதிகபட்சமாக 24, 287 குண்டுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வீசப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டுப்படைகள் முஸ்லிம் நாடுகள் மீது நடத்திய விமானப்படை தாக்குதல்களில் அமெரிக்க 67% தாக்குதல்களை ஈராக்கிலும் 96% தாக்குதலை சிரியாவிலும் நடத்தியுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் மட்டும் போரினால் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 2,50,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பத்து லட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 50% மேலான மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன. 2011 இல் மட்டுமே ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த போரினால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.