அமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 ஃபலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல்

0

அமைதி பேரணியில் கலந்துகொண்ட 41 பலஸ்தீனியர்களை கொலை செய்த இஸ்ரேல்

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஃபலஸ்தீன மக்கள் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “Great March of Return” என்றழைக்கப்படும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது அவ்வப்போது இஸ்ரேலிய இராணுவம் தங்களது காட்டுமிராண்டி தனத்தை கட்டவிழ்த்துவிடும். இந்நிலையில் ஃபலஸ்தீனின் ஜெருசலேம் நகரத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதை எதிர்த்த ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தற்போது எல்லையற்ற வன்முறையை கட்டவைழ்த்துவிட்டுள்ளது.

காஸா பகுதியின் எல்லையோரக்தில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 900 ஃபலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பேரணியில் ஈடுபட்டோர் இஸ்ரேலிய எல்லைப்புற வேலிகளுக்கு அருகில் சென்ற காரணத்தாலும் அதில் சிலர் கற்களை வீசியதாலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆனால் ஃபலஸ்தீன மக்களோ இது தங்களின் அடிப்படை உரிமைக்கான போராட்டம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து ஃபலஸ்தீன ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கையில், “இன்றைய தினம் எங்களுக்கு மிகப்பெரிய தினம். நாங்கள் இஸ்ரேலில் வேலிகளைத் தாண்டி எங்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இஸ்ரேலுக்கும் உலகுக்கும் பிரகடனப் படுத்தும் நாள். இன்று பலர் இரத்த சாட்சியாகியுள்ளனர். ஆனால் இந்த உலகம் எங்கள் செய்தியை செவியேர்க்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய வன்முறையால் கொலை செய்யப்பட்டோரில் ஒரு 14 வயது சிறுவன், ஒரு அவசர மருத்துவக் குழு உறுப்பினர் மற்றும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவர் ஆகியோரின் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இஸ்ரேல் அரசு இவர்களை தீவிரவாதிகள் என்றும் இவர்கள் இஸ்ரேலின் எல்லையில் குண்டு வைக்க முற்பட்டார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது. ஆறு வார காலமாக நடைபெற்று வரும் இந்த அமைதிப் போராட்டத்தில் ஏற்பட்ட ஃபலஸ்தீன தரப்பின் பலி எண்ணிக்கையை தற்போதையை இந்த உயிரிழப்பகளினால் 86 ஆக உயர்த்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர். முன்னர் இஸ்ரேலிய இராணுவம் இவரது கால்களையும் பறித்தது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை ஏற்றுக்கொள்வது மூலம் சர்வதேச கோபத்தை பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் , “இஸ்ரேலுக்கு இது மகத்தான நாள்என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவோ, “இஸ்ரேலுக்கும் அதன் மக்களும் இது உணர்ச்சி பொங்கிய நாள்.” என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தந்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தாலும் அமெரிக்கா இஸ்ரேலிய அரசு கூறுவதை அப்படியே ஒப்பித்துள்ளது. இன்னும் அமெரிக்காக்கவை தொடர்ந்து குவாடெமாலாவும் தங்கள் தூதரகத்தை ஜெருசலேத்தில் திறக்க முடிவு செய்துள்ளது.

ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் உடனான அமைதி பேச்சுவார்தியின் இறுதி நிலையில் தான் ஜெருசலேம் குறித்து தீர்மானிக்கக் வேண்டும் என்றும் தற்போது ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பது இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்பது சர்வதேச சமூகத்தின் கருத்தாக உள்ளது.

Comments are closed.