அம்பேத்கர் இந்திய அரசியல் சாசன சிற்பி அல்ல: பாஜக எம்.எல்.ஏ.

0

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர்.அம்பேத்கர் அல்ல என்றும் வாக்கு வங்கி தான் அவரை அவ்வாறு மாற்றியுள்ளது என்று ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.விஜய் பன்சால் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் 126வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நாளில் ராஜஸ்தானின் பரத்பூர் தொக்கி எம்.எல்.ஏ. இந்த கருத்தை தெரிவிதுள்ளார். மேலும் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்த கமிட்டியில் அம்பேத்கர் வெறும் ஒரு உறுப்பினராக மட்டும் தான் இருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சபையில் தலைமை வகித்த டாக்டர் அம்பேத்கர் இந்திய அரியல் சாசனத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவர் பின்னர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

மோடி உட்பட இந்துத்வா சக்திகள் அம்பேத்கரை உள்வாங்க முயற்சித்து அவர் மூலம் தலித் மக்களிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்க்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்த வேலையில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ள பன்சால், தனது கூற்றை தொடர்ந்து அம்பேத்கர் புத்திக் கூர்மையுடையவர் என்றும் அதில் எத்தகைய சந்தேகமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பாரத்பூரின், கிருஷ்ணா நகர் காலனியில் உள்ள பள்ளி ஒன்றின் துவக்க விழாவிற்குசென்ற பன்சால் இந்த கருத்துக்களை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

பன்சாலின் இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கேலோத், அந்த பாஜக தலைவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் அவர் அவரது கட்சியின் எண்ண ஓட்டத்தை அவர் அவரது கருத்து மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Comments are closed.