அயல்நாடுகளில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றது: ஆர்எஸ்எஸ்

0

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவில் மட்டுமே 15 நாள் காலகட்டத்திற்குள் இந்தியர்கள் மீதான மூன்று தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. (பார்க்க செய்தி). நிலைமை இவ்வாறிருக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன என்று ஆர்.எஸ்.எஸ். இன் சதானந் சாப்ரி கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இன் விஷய விபாக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இவர், இது போன்ற தாக்குதல்கள் அரிதாக நடக்கும் நிகழ்வுகள் என்றும் அதனை ஊடகங்கள் பெரிது படுத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஊடகங்களின் இயல்பே அது தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனாலும் இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து, வெளிநாடுகளில் இந்தியர் தாக்கப்படுவது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலாக வந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த தாக்குதலை சுட்டிக்காட்டிய அவர் இது போன்ற தாக்குதல்களுக்கு சில நேரங்களில் இந்தியர்கள் செய்யும் தவறுகள் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் மெல்போர்ன் சம்பவம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது அனைத்து இந்தியர்களும் குரிவைக்கப்படுகிரார்கள் என்பது போல செய்தி வெளியிட்டன. ஆனால் அப்பகுதி மக்களிடம் விசாரிக்கையில், நிலைமை அவ்வாறில்லை என தெரிந்தது. ஊடகங்களுக்கு விஷயங்களை பெரிதுபத்துவது வழக்கமாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

“இது மிகவும் அரிதாக நடக்கும் சம்பவங்கள் என்றும் இது போன்ற சம்பவங்கள் அனைத்து இடங்களிலும் நடக்கும், ஏன் இந்தியாவில் கூட நடக்கும்” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பீகாரை சேர்ந்தவர்கள் மும்பையில் தாக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதியர்களின் பாதுகாவலர்கள் என்றும் தங்களை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்களை கண்டிக்கவில்லை என்றாலும், அவற்றை நியாயப்படுத்தி பேசுவது இவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Comments are closed.