அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்: யோகி ஆதித்யநாத்

0

தனது கருத்துக்களால் பல சர்ச்சைகளை அவ்வப்போது கிளப்பி வரும் பா.ஜ.க. எம்.பி யோகி ஆதித்யநாத் , அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோவில் ஒன்று விரைவில் கட்டப்படும் என்று சனிக்கிழமை கூறியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவர் இதனை கூறியுள்ளார். மேலும், இந்த நாடு அரசியலமைப்பு சட்டத்தின் படி நடக்கும் என்றும் எந்த ஷரியத்தின் அடிப்படையிலும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பல சாமியார்கள் இந்த கோவில் கட்டப்படுவதற்காக போராடி வருகிறார்கள் என்றும் அதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார்.  அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டுமானால் இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உத்திர பிரதேசத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் பா.ஜ.கவினர் இது போன்ற செயல்கள் மூலம் அம்மாநில மக்களை மத ரீதியாக பிளவு படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.