அயோத்தியா விவகாரம்: ஜனாதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அவசர கடிதம்

0

அயோத்தியா விவகாரம்: ஜனாதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் அவசர கடிதம்

ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிசத் மற்றும் பிற இந்துத்துவ அமைப்பினர்களின் தலைமையில் நடைபெற்று வரும் வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களால் அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நிலைமை மோசமாகி வரும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ. அபூபக்கர் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இதில் உடனடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்து நவம்பர் 24 அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

வெளியூர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட வெறிபிடித்த குண்டர்களால் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போர்க்கள சூழலை குறித்த ஊடகங்களின் செய்தியின் மீது கவனத்தை செலுத்துமாறும் அபூபக்கர் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய சூழல்கள் உள்ளூரில் வாழும் முஸ்லிம்களுக்கு பீதியையும், பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கின்றனர். 1992 டிசம்பரில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு இதே போன்ற ஒரு சூழல் இருந்ததை அவர் நினைவுபடுத்தினார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.