அயோத்தியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை!

0

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ்தாக்கரே தனது கட்சியை சேர்ந்த 18 எம்பிக்களுடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாளை செல்லவுள்ளனர். அதேபோல் உத்தரபிரதேச மாநில துணைமுதல்வர் கேசவ் மரியாவும் இன்று வழிபாடு செய்கிறார். மேலும் ராமஜென்ம பூமி தலைவர் மஹாந்த் நிருத்திய கோபால்தாசரின் 81 வது பிறந்த தினம் இன்று கொண்டாடபடவுள்ளது.

இதனையடுத்து அயோத்தியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக அயோத்தியில் பஸ்கள், ரயில்கள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.