அயோத்தியில் பூஜாரி படுகொலை

0

அயோத்தியில் ஏப்ரல் 9 அன்று புகழ் பெற்ற பிரஹாம் பாபா கோயிலின் மூத்த பூஜாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 62 வயதான இவர் அவரின் தங்கும் இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். கோயிலின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட கொலையாக இது இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
‘கோயிலின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக அவரின் சீடர்களோ அல்லது மற்ற பூஜாரிகளோ இந்த கொலையை செய்திருக்கலாம்’ என்று இந்த வழக்கை விசாரித்து வரும் பைஸாபாத் எஸ்.பி. ஆர்.எஸ்.கௌதம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சாதுகள் மத்தியில் இவ்வாறு பிரச்சனைகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. கோயில்களின் வருமானத்தை பிரிப்பதிலும் சொத்துகள் குறித்தும் எழும் மோதல்கள் சில சமயங்களில் கொலையில் முடிகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போன்று ஏறத்தாழ பத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் ஆறு சாதுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் உளவுத்துறை அதிகாரி எஸ்.கே. ஜெயின் தெரிவித்துள்ளார்.

Comments are closed.