அயோத்தியில் ராமர்கோயிலை கட்டும் முயற்சியில் வி.ஹெச்.பி!இரண்டு ட்ரக்குகளில் கற்கள் வருகை!

0

பைஸாபாத்:மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான முயற்சியில் வி.ஹெச்.பி ஈடுபட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் கோயிலை கட்டுவதற்கு தேவையான இரண்டு லோடு கற்கள் கொண்டுவரப்பட்டன.

வி.ஹெச்.பியின் கட்டுப்பாட்டில் உள்ள ராமசேவகபுரத்தில் இந்த கற்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ராமஜென்ம பூமி நியாஸ் தலைவன் மஹந்த் கோபால் தாஸின் தலைமையில் கல் பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. வரும் தினங்களில் இன்னும் அதிகமான கற்கள் கொண்டுவரப்படும் என்று வி.ஹெச்.பியின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா தெரிவித்துள்ளார். மஹந்த் கோபால் தாஸ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,’மோடி அரசிடமிருந்து சிக்னல் கிடைத்தால் தற்போதே கோயிலை கட்டிவிடுவோம்’ என்று கூறுகிறார்.

பாபரி மஸ்ஜித் நில மூல உரிமை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கற்களை கொண்டுவர அனுமதிக்கமாட்டோம் என்று உ.பி மாநில உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.அமைதியை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று பைஸாபாத் சீனியர் எஸ்.பி கூறியுள்ளார்.

Comments are closed.