அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

0

அயோத்தியில் 2005ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பயங்கிரவாதிகள் தாக்குதல் நடத்திய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் (அலாகாபாத்) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அயோத்தியில் கடந்த 2005ஆம் ஆண்டு 5ஆம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த பாபர் மசூதி வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் தீவிரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டதுடன் பொதுமக்கள் இருவர் உயிரிழந்திருந்தனர். மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது பிரயாக்ராஜில் (அலாகாபாத்) உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நிறைவடைந்துவிட்டன. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. அதில், கைது செய்யப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒருவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.