அயோத்தி வழக்கு: சமரப் பேச்சுவார்த்தைக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம்!

0

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண்பதற்காக, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய மூன்று நபர் கொண்ட குழுவை கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த மூவர் குழு பேச்சுவார்த்தை தொடர்பான முதற்கட்ட அறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சமரசப் பேச்சுவார்த்தையை முழுவதுமாக முடிக்க கால அவகாசம் வேண்டும் என மூவர் குழு கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.