அரசின் விடுமுறை பரிசு:ரயில் தட்கல் பயண கட்டணம் அதிகரிப்பு

0

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக மக்கள் தங்கள் குடும்பங்களை காண புறப்படும் இந்த சமயத்தில் மத்திய அரசாங்கம் தனது கசப்பு மருந்தை கொடுக்க தொடங்கிவிட்டது. ரயில் தட்கல் பயண கட்டணத்தை 33% அதிகரித்துள்ளது.

படுக்கை வசதி, ஏ.சி. இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு இந்த பயண கட்டண உயர்வு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில்  குறைந்த பட்ச தட்கல் கட்டணம் இனி 100 ரூபாயாக இருக்கும். அதிகபட்சமாக 200 ரூபாய் வரை, பயணிக்கும் தூரத்தை பொறுத்து, செலுத்த வேண்டியிருக்கும்.

ஏ.சி. வகுப்பு பயண கட்டணங்களில் குறைந்த பட்ச கட்டணமாக இருந்த 250 ரூபாய் 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகப்படியான கட்டணமாக 350 ரூபாய் தற்பொழுது 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏசி வகுப்புகளில் பயணம் செய்ய இனி அதிகபட்சமாக 500 ரூபாய் வரை தட்கல் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு இனி முழு கட்டணம் வசூலிக்கப்படும் என இரண்டு தினங்களுக்கு முன்னர் ரயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது.
பொதுவாக பட்ஜெட்டின் போதுதான் இதுபோன்ற கட்டண உயர்வுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் மத்திய அரசு தற்போதே கட்டணைத்தை உயர்த்தியதை தொடர்ந்து பட்ஜெட்டின் போதும் கட்டண உயர்வு இருக்குமோ என்று மக்கள் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

 

Comments are closed.