அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்

0

அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் சங்பரிவார அரசியல்

நவம்பர் 26, 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு, அரசியல் சாசன நிர்ணய அவை அங்கீகாரத்தை வழங்கியது. ஆனால், அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியும், அதன் தலைவர்களும் அரசியல் சாசன தத்துவங்களையெல்லாம் காலில் போட்டு மிதித்த காட்சி அரங்கேறியது. குடியரசு தலைவர், ஆளுநர், பிரதமர், உள்துறை அமைச்சர் என இந்தியாவின் உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் இந்த ஜனநாயக சீர்குலைவை அரங்கேற்றினர்.

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள மேகாலயாவிலும், எதிர்கட்சிகளுக்கு பெரும்பான்மை இருந்த கோவாவிலும் இதே வழிமுறையை கடைப்பிடித்து அரசியலமைப்பு சட்டத்தை பார்வையாளராக்கி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. கர்நாடகாவிலும் இதே வழிமுறையை அக்கட்சி கையாண்ட போதிலும் உச்சநீதிமன்றம் தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்தே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.