அரசியல் சதுரங்கத்தில் பலியாகும் உயிர்கள்

0

அரசியல் சதுரங்கத்தில் பலியாகும் உயிர்கள்

ஜூன் 19 அன்று தலைமை செயலகத்தில் வழமை போல் தனது பணிகளில் ஈடுபட்டிருந்தார் கஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி. அன்று மதியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பணியாளர்களின் பதவி உயர்வு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை சகாகளுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். இந்த கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் சற்றும் எதிர்பாராத ஒரு செய்தியை கேள்விப்பட்ட மெஹ்பூபா, தொலைக்காட்சி சேனல்களை பார்க்க ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில் தொலைபேசியில் அவரை அழைத்த ஆளுநர் என்.என்.வோரா தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தினார்.

மூன்றரை வருடங்கள் ஆட்சியில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, கூட்டணியில் இருந்து ஆதரவை வாபஸ் பெறும் அறிவிப்பை டெல்லியில் வெளியிட்டார் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் ராம் மாதவ். முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளரான இவர்தான் கட்சியின் கஷ்மீர் விவகாரங்களையும் கவனித்து வருகிறார். ஆதரவு வாபஸ் பெறப்பட்ட செய்தியை தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஆளுநர் மூலம்தான் அறிந்து கொண்டார் முதல்வர். கூட்டணி கட்சி தலைவருக்கு மரியாதை நிமித்தம் கூட தங்களின் முடிவை அறிவிக்காமல் நேரடியாக ஆளுநருக்கு தங்கள் முடிவை அனுப்பினர் பா.ஜ.க.வினர்.

டிசம்பர் 2014ல் கஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததை தொடர்ந்து, சில மாத பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மக்கள் ஜனநாயக கட்சியும் பா.ஜ.க.வும் இணைந்து மார்ச் 2015ல் கூட்டணி ஆட்சி அமைத்தன. சந்தர்ப்பவாதத்தில் அமைந்த இக்கூட்டணி கஷ்மீர் மக்களின் வாழ்க்கையை இன்னும் மோசமாக்கி கஷ்மீர் பிரச்சனையை சிக்கலாக்கியது. கூட்டணிக்கான செயல்திட்டம் (அஜெண்டா ஃபார் அலையன்ஸ்) என்று இரு கூட்டணி கட்சிகளும் தயார் செய்தாலும் இதுவரை அதில் முக்கியமான எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை. இருவருக்கும் அதை குறித்த எந்த அக்கறையும் இல்லை. கடந்த மூன்றரை வருடங்களில் கஷ்மீரில் தாக்குதல்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் என எல்லாம் தொடர்ந்து அதிகரித்தன. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் போராட்டங்களில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பார்வையை நிரந்தரமாக இழந்தனர். எட்டு வயது சிறுமியை சீரழித்த குற்றவாளிகளுக்கு தேசிய கொடியை தூக்கிச் சென்று மாநில அமைச்சர்கள் ஊர்வலம் நடத்தும் அளவிற்கு நிலைமை மோசமானது.

பல்வேறு சூழல்களில் இரு கட்சிகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் எழுந்த போதும் இருவரும் பதவியில் ஒட்டிக் கொண்டனர். ஆனால் தற்போது தனது எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு பா.ஜ.க. இம்முடிவை எடுத்துள்ளதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊழலை ஒழிப்போம், வேலைவாய்ப்புகளை பெருக்குவோம், பொருளாதாரத்தில் விண்ணை முட்டும் வளர்ச்சியை அடைவோம் என்ற பா.ஜ.க.வின் பசப்பு வார்த்தைகளுக்கு பலியாகி 2014 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது நான்காண்டுகள் கழிந்துள்ள நிலையில் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நல்ல காலம் வருவதற்கான சாத்தியமே இல்லை என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.