அரசு ஊழியர்கள், மாணவர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தடை விதித்தது சீன அரசு!

0

இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நோன்பை அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொள்ளக்கூடாது என சீனாவில் உள்ள ஸிங்ஜியாங் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த மாகாணத்தில் இயங்கிவரும் அனைத்து ஹோட்டல்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அரசு அதிகாரி ஒருவர், “ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்ள கூடாது, இறை வழிபாடு மேற்கொள்ள கூடாது. மேலும் மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகு உள்ளூர் அரசு வலைதளத்தில் பதிவிடப்பட்டது” என்று கூறினார்.

ஆண்டுதோறும் ரமலான் காலகட்டத்தில் அந்த மாகாண அரசு இதுபோன்ற விதிமுறைகளை தொடர்ந்து அமல்படுத்துவதால் அங்கு நோன்பு காலகட்டத்தில் தொடர்ந்து கலவரங்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த வருகின்றனர்.

Comments are closed.