அரபுக் குழு நாடுகளின் தடையால் கத்தாரில் உணவு பற்றாக்குறையா? உண்மை நிலை என்ன?

0

சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் கத்தார் உடனான தங்களின் ராஜாங்க உறவை முறித்துக் கொண்டதோடு அந்நாட்டுடனான போக்குவரத்தையும் தடை செய்துள்ளது. இந்த தடையினால் கத்தாரில் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தி பரப்பட்டது. இதற்கு காரணம் கத்தார் தனது உணவுப்பொருட்களின் 80 சதவிகிதத்தை மேற்கண்ட நாடுகளிடம் இருந்து பெற்று வந்தது தான்.

இந்த தடை உத்தரவை அடுத்து கத்தாரின் உணவு பொருட்களின் இறக்குமதி மற்றும் அவை எங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது என்பதை நன்கு அறிந்து மக்கள் சாரை சாரையாக கடைகளுக்கு சென்று ஒட்டுமொத்தமாக பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் அங்கு தற்காலிக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் தற்போது இந்த உணவுப் பொருட்களை கத்தாருக்கு ஈரான் வழங்க முன் வந்துள்ளது. ஈரானில் இருந்து இறைச்சி, பால், காய்கறிகள் முதல் பல உணவுப் பொருட்கள் கத்தாருக்கு அனுப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20 மணி நேரங்களில் துருக்கியும் கத்தாருக்கு உணவுப் பொருட்களை அனுப்பி உதவியுள்ளது.

தற்போது கத்தார் தன் நாட்டு மக்களுக்கு 12 மாதங்களுக்கு தேவைப்படும் உணவுகளை சேமித்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தங்கள் நாட்டு உணவு இருப்பு குறித்து கத்தாரின் பொருளாதார அமைச்சகம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளது பதற்றத்தை குறைத்துள்ளது. இது போன்ற ஒரு சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று 2014 ஆண்டு முதலே கத்தார் திட்டமிட்டு தயாராகியிருந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த வருடத்தில் தான் தற்போதுள்ள தடைக்கு முன்னோடி போன்றதொரு தடையை இதே காரணங்களைக் கூறி சவூதி தலைமையிலான நாடுகள் கத்தார் மீது அறிவித்தன. அப்போது கத்தார் உடனான போக்குவரத்து தொடர்பாக எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை.

Comments are closed.