அரபுலக வசந்தம் மீண்டும் வீசுமா?

0

அரபுலக வசந்தம் மீண்டும் வீசுமா?

எகிப்தின் வீதிகளில் போராட்ட கோஷங்களுடன் மக்கள் மீண்டும் ஒன்று திரண்டு விட்டனர். செப்டம்பர் 20 அன்று எகிப்தின் எட்டு முக்கிய நகரங்களில் கூடிய மக்கள் ‘‘இந்த ஆட்சி போக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்’’ என்று கோஷங்களை இட்டனர். 2011 தொடக்கத்தில் அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் வீதிகளில் குழுமி போராட்டத்தை நடத்திய நாட்களை தற்போதைய நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன. ‘அரபுலக வசந்தம் செத்துவிட்டது என்று கூறுபவர்களுக்கு பதிலடியாக எகிப்தின் இந்தப் போராட்டம் அமையும்’ என்றும் ‘வசந்தம் ஒருபோதும் சாகவில்லை’ என்றும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2010 இறுதியில் துனீசியாவில் தொடங்கிய அரபுலக வசந்தம் எகிப்தையும் பற்றிக்கொண்டது. 30 ஆண்டுகள் ஆட்சியில் நீடித்து சர்வாதிகாரத்தை முழுவதுமாக நிலைநாட்டிய ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் திரண்டனர். கடுமையான அடக்குமுறைகளையும் மீறி நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் காரணமாக பிப்ரவரி 2011இல் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார் முபாரக்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply