அரபு – இஸ்ரேலிய உறவும் ஃபலஸ்தீனின் துயரமும்

0

அரபு – இஸ்ரேலிய உறவும் ஃபலஸ்தீனின் துயரமும்

அக்டோபர் 25 அன்று வளைகுடா நாடான ஓமனுக்கு சென்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஓமன் நாட்டின் சுல்தான் காபுஸ் பின் சயீதை தலைநகர் மஸ்கத்தில் சந்தித்து உரையாடினார். கடந்த இருபது வருடங்களில் இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஓமன் நாட்டிற்கு செல்வது இதுதான் முதல் முறை. 1994 ஆஸ்லோ ஒப்பந்தங்களை தொடர்ந்து இரு நாடுகளும் வர்த்தக அலுவலகங்களை தொடங்குவதற்கு ஒப்புக் கொண்டன. 2000ல் தொடங்கிய அல் அக்ஸா இன்திஃபாதாவை தொடர்ந்து இஸ்ரேல் உடனான உறவுகளை ஓமன் முறித்துக் கொண்டது. தற்போது தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின், மத்திய கிழக்கில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக, அறிக்கை வெளியிடப்பட்டது. ஓமனில் இருந்து நேதன்யாகு இஸ்ரேல் திரும்பிய அன்றைய தினமே, காஸாவில் ஐந்து ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாத்தின் தலைவர் யோசி கோஹனின் நான்கு மாத கால முயற்சிகளுக்கு பிறகு நேதன்யாகுவின் பயணம் உறுதி செய்யப்பட்டது. பிரதமரின் பயணத்தை தொடர்ந்து இஸ்ரேலிய போக்குவரத்து துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், ஓமனுக்கு சென்று சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். இஸ்ரேலை ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுடன் கடல் மற்றும் ரயில் மார்க்கமாக இணைக்கும் திட்டத்தையும் அவர் இந்த பயணத்தின் போது முன்வைத்தார்.

அக்டோபர் 26 அன்று இஸ்ரேலிய கலாசார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மிரி ரெஜவ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணத்தை மேற்கொண்டார். அந்நாட்டின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற ஜூடோ போட்டியொன்றில் இஸ்ரேலிய வீரர் தங்கப்பதக்கம் பெற்றதை தொடர்ந்து அரங்கில் ஆனந்த கண்ணீருடன் தனது நாட்டின் தேசிய கீதத்தையும் பாடினார். ஐக்கிய அரபு மண்ணில் இவர் இஸ்ரேலிய தேசிய கீதத்தை பாடிய அக்டோபர் 28 அன்று மூன்று ஃபலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர். பின்னர், அபுதாபியில் உள்ள ஷேக் ஸெய்த் மஸ்ஜித்திற்கும் சென்று சுற்றிப் பார்த்தார் மிரி ரெஜவ். தீவிர வலதுசாரி சியோனிச சிந்தனை கொண்ட இவர், இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டுள்ளார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.