அரபு நாடுகள் காஸாவிலும் தாக்குதல் நடத்தவேண்டும் – மஹ்மூத் அப்பாஸ்!

0

மேற்குகரை: ஏமனில் ஹூதிகள் மீது சவூதி தலைமையில் தாக்குதலை நடத்தியது போல காஸாவிலும் நடத்தவேண்டும் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அரபு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரபு உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட மஹ்மூத் அப்பாஸ்,’உள்நாட்டு பிரச்சனைகளும், பிரிவினைகளும்’ என்ற  என்ற தலைப்பில் பேசும்போது, ‘உள்நாட்டு பிரச்சனைகளும், பிரிவினைகளும் நீடிக்கும் யெமன் போன்ற பிரதேசங்களில் நடத்தியது போன்ற வான் வழித் தாக்குதல்களை காஸாவிலும் நடத்தவேண்டும்’ என்று தெரிவித்தார்.

மஹ்மூத் அப்பாஸின் மத விவகார ஆலோசகர் மஹ்மூத் அல் ஹப்பாஷ் கூறியதாவது:காஸாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது.ஆட்சி கவிழ்ப்பை நடத்தியவர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் சாத்தியமில்லை.அவர்களுக்கு கடுமையான பதிலடி வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அப்பாஸின் அறிக்கையை ஹமாஸும், இஸ்லாமிக் ஜிஹாதும் விமர்சித்துள்ளன.’காஸாவில் இஸ்ரேலை எதிர்த்து போராடும் இயக்கங்களை அப்பாஸ் குறிவைத்துள்ளார்.’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பாஸின் அறிக்கையைக் கண்டித்து காஸாவில் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் தலைமையில் போராட்டங்கள் நடந்தன.

Comments are closed.