அருந்ததி ராய் மீதான சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்காத பாஜகவின் பரேஷ் ராவல்  

0

நடிகராக இருந்து பின்னர் அரசியலில் இறங்கிய பாஜக எம்.பி. பரேஷ் ராவல் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயை தாக்கி சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

கஷ்மீரில் இராணுவத்தினர் அப்பாவி இளைஞர் ஒருவரை இராணுவ வாகனம் முன் கட்டி வைத்து மனித கேடையமாக பயன்படுத்தியது. பின்னர் இந்த செயலை செய்த இராணுவ மேஜருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது (பார்க்க செய்தி). இந்த சம்பவத்தை தொடர்து பாகிஸ்தானிய ஊடகம் ஒன்று அருந்ததி ராய் இந்திய இராணுவத்திரை விமர்சித்ததாக செய்தி ஒன்றை வெளியிட்டது. இதனை தொடர்ந்து இராணுவத்தினர் அந்த இளைஞருக்குப் பதில் அருந்ததி ராயை அந்த வாகனத்தில் கட்டி வைக்கலாம் என்று பரேஷ் ராவல் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். பாகிஸ்தானிய ஊடகம் வெளியிட்ட அந்த செய்தி போலியானது என்று தற்போது தெரிய வந்த பின்னரும் தனது கருத்துக்கு மனிப்பு கேட்காத அவர் தான் அருந்ததி ராய் குறித்து கூறியது சரிதான் என்று கூரியுள்ளார்.

அருந்ததி ராய் தனக்கு பதில் தராத இந்திய இராணுவத்தை மிக மோசமாக விமர்சிகின்றார். தற்போது அருந்ததி ராய் குறித்து வெளியான செய்தி பொய் என்ற போதும் அருந்ததி ராயை இராணுவ வாகனத்தில் கட்டி வைத்தால் கஷ்மிரிகள் கல் எரிய மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் இருவரும் கருத்தொற்றுமை கொண்டவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இன்னும் தனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அருந்ததி ராய் இராணுவம் குறித்து பேசிய போது ஏன் எதுவும் பேசவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் அருந்ததி ராய் இராணுவம் குறித்து கருத்து தெரிவிப்பது கருத்து சுதந்திரம் என்றால், தான் அருந்ததி ராய் குறித்து கருத்து தெரிவிப்பதும் கருத்து சுதந்திரம் தான் என்று அவர் கூறியுள்ளார்.

“அவர் (அருந்ததி ராய்) செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரி அவர் வருத்தம் தெரிவித்தால் நானும் வருத்தம் தெரிவிப்பேன். அந்த செய்தி போலியானது தான் என்று ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் 2002 கோத்ரா கலவரத்தின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் என்னானது? அவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்றால் எனக்கும் உண்டு.” என்று அவர் கூறியுள்ளார்.

இன்னும் அருந்ததி ராய் போன்றவர்கள் சர்வதேச அரங்கில் சென்று பேசுகிறார்கள் என்றும் அங்கு அவர்களுக்கு பணமும் விருதுகளும் கிடைகின்றது என்றும் கூறிய பரேஷ் ராவல், அவருக்கு மரியாதை கிடைகின்றது என்பதனால் முட்டாள் தனமாக அவர் பேசிக்கொண்டு இருக்கின்றார் என்று அருந்ததி ராய் குறித்து கூறியுள்ளார்.

அருந்ததி ராய் குறித்த தனது கருத்து அமைத்திக்கான செய்தி என்று கூறிய பரேஷ் ராவல், அருந்ததி ராயை இராணுவ வாகனத்தில் கட்டி வைத்தால் யாரும் அவர் மீது கல்லெறிய மாட்டார்கள், அவர் கஷ்மீரிகளின் கருத்தை ஆதரிப்பதால் அவரை யாரும் தாக்க மாட்டார்கள். இதனால் அங்கு வன்முறை குறையும் என்ற ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

Comments are closed.