அர்மீனியா – அஸர்பைஜான் போர் பின்னணி என்ன?

0

அர்மீனியா – அஸர்பைஜான் போர் பின்னணி என்ன?

அர்மீனியா, அஸர்பைஜான் இடையே கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக நடைபெற்ற கடுமையான சண்டைக்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று நள்ளிரவில் ரஷ்யா மேற்கொண்ட இரண்டாவது முயற்சியில் ‘மனிதாபிமான போர் நிறுத்த’ உடன்படிக்கை ஏற்பட்டது.

இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள நகோர்னோ-கராபக் என்ற மலைப்பகுதியின் உரிமை குறித்த சச்சரவே மோதலுக்கான மூல காரணமாகும். நகோர்னா-கராபக் காகசஸ் மலைகளின் எல்லைக்குள் கராபக் பிராந்தியத்தில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியாகும். இப்பகுதி மலை மற்றும் காடுகள் நிறைந்ததாகும். இந்த மலைப் பகுதியின் பரப்பளவு 4400 சதுர கிலோமீட்டர். இது அஸர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், 1994ஆம் ஆண்டு நடந்த போர் முடிவடைந்த பிறகு அர்மீனிய கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

இங்கு துருக்கி வம்சா வழியைச் சேர்ந்த முஸ்லிம்களும், அர்மீனிய கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர்.

1994ஆம் ஆண்டு நடந்த போரில் பல்லாயிரக்கணக் கானோர் இறந்தனர். பத்து இலட்சம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் அர்மீனிய தாக்குதலில் ஒரு அஸர்பைஜான் இராணுவ ஜெனரலும், 20 பொது மக்களும் கொல்லப்பட்டனர். இது புதிய மோதலுக்கு துவக்கம் குறித்தது.

பின்னர் செப்டம்பர் மாதம் இரு நாடுகளுக்கிடையே அமலில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. 2016க்கு … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.