அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!

0

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!

1975 ஜூன் 25-ஆம் தேதி சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். தற்போது அதன் 43-வது நினைவு தினம் நம்மை கடந்து சென்றது.வழக்கம் போல நெருக்கடி நிலையின் போது தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.யும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க.வும் அதற்கு எதிராக கடுமையான கோபத்தையும் கண்டனங்களையும் பதிவு செய்தன. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்திரா காந்தியை ஜெர்மனியின் ஹிட்லரோடு ஒப்பிட்டார். இருவரும் ஜனநாயகத்தை, ஏகாதிபத்தியமாக மாற்ற அரசியல் சாசனத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய அருண் ஜேட்லி, ஹிட்லரிடமிருந்து மாறுபட்டு இந்திரா இந்தியாவை குடும்ப ஆதிக்க நாடாக மாற்ற முயற்சித்தார் என்று கூறினார்.

இந்திய ஜனநாயகத்தின் மீதான அத்துமீறலே நெருக்கடி நிலை பிரகடனம் என்பதை மறுக்க முடியாது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர இதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி கரும்பு தோட்டத்தில் நுழைந்த யானையைப் போல அப்பாவி மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கினார். டெல்லியில் துருக்மான் கேட் என்ற பகுதியில் அங்கீகாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்த மக்கள் முன்னறிவிப்பின்றி வெளியேற்றப்பட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அப்பாவிகள் பலர் வலுக்கட்டாயமாக கருத்தடை அறுவைச் சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.