அறிவிக்கப்பட்ட இரண்டே வருடங்களில் 2000 ரூபாய் அச்சிடுவது நிறுத்தம்

0

கறுப்புப் பணம் பற்றும் பணப் பதுக்கள்களுக்கு 2000 ரூபாய் தாள்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவதால் புதிய 2000 ரூபாய் தாள்களை அச்சிடுவதை மத்திய பாஜக அரசு நிறுத்தியுள்ளது.

2016 நவம்பர் மாதம் நாட்டின் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி மோடி அதிரடியாக ஒரே நாளில் அப்போது புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தார். நாட்டில் மொத்த பண புழக்கத்தில் ஏறத்தாழ 80%க்கும் மேற்ப்பட்ட ரூபாய் தாள்கள் இந்த அறிவிப்பிற்குப் பிறகு செல்லாததானது. இதனை பின்தொடர்ந்த பணப்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு புதிய 2000 ரூபாய் தாள்களை அறிமுகம் செய்தது.

புதிய 2000 ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதே பல சர்ச்சைகளை பெற்றது. இந்த புதிய 2000 ரூபாய் தாள்கள் பணப்பதுக்கல், வரி ஏய்ப்பு, போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை அதிகாரிக்கும் என்று பலர் எச்சரித்தனர். இவர்களின் இந்த அச்சம் கடந்த ஏப்ரல் மாதம் உண்மையானது. அப்போது நாட்டில் பெருமளவிலான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இது பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றிய நீரவ் மோடி நாட்டில் இருந்து தப்பி ஓடியதன் விளைவாக ஏற்பட்டது என்று கருதப்பட்டது. இதே காலகட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளும் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 ரூபாய் நூட்டுக்களை கைப்பற்றினர்.

பல பிரபலங்களும் செய்தியாளர்களும் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அது பல அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதாகவும் இந்த ரூபாய் தாள்களை எங்கும் பதுக்கி வைக்க முடியாது என்றும் அப்படி பதுக்கி வைத்தாலும் கூட அதனை கண்டு பிடித்து விடலாம் என்றும் பல கதைகளைக் கூறினர். இப்படி 2000 ரூபாய் தாள்கள் எதை எல்லாம் தடுக்கும் என்று கூறப்பட்டதோ அதே காரணங்களுக்காக தற்போது நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்த பண புழகமான 18.03 லட்சம் கோடி ரூபாயில் 6.73 லட்சம் கோடி ரூபாய்கள் புதிய 2000 ரூபாய் தாள்கள் ஆகும். இது மொத்த பண புழகத்தில் 37 சதவிகிதமாகும். தற்போதைய இந்த முடிவினை அடுத்து 500 ரூபாய் அச்சிடும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.