அலாவுதீனின் நாடான அக்ரபா மீது குண்டு வீச வேண்டும் – 30% அமெரிக்கர்கள்

0

அமெரிக்க தேர்தல் நெருங்கிகொண்டிருக்கும் வேலையில் மக்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் ஒரு கேள்வி “நீங்கள் அக்ரபா மீது குண்டு வீசுவதை ஆதரிப்பீர்களா எதிர்ப்பீர்களா” என்பது.

இந்த கேள்விக்கு 30% பேர் குண்டு வீசுவதை ஆதரிக்கிறேன் என்று பதிலளித்து இருக்கின்றனர். அக்ரபா பற்றி அறியாதவர்களுக்கு, 1992 வருடம் டிஸ்னி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அலாவுதீன் கார்டூனில் வரும் கற்பனை நகரம் அது.

இந்த கேள்விக்கு 13 % பேர் நாங்கள் குண்டு வீசுவதை ஆதரிக்கவில்லை என்றும் 57% பேர் தெரியவில்லை என்றும் பதிலளித்துள்ளனர். இந்த முறை நடக்கும் அமெரிக்க தேர்தல் எப்போதும் விட சற்று அதிகமாக மத்திய கிழக்கு அரசியலையே சூழ்ந்துள்ளது. அதிலும் அதிபர் வேட்பாளாரான டொனால்ட் டிரம்ப் என்பவர் சிரியா அகதிகளை ஐரோப்பாவை ஆக்கிரமிக்க வந்தவர்கள் என்று கூறியதும், முஸ்லிம்கள் அமெரிக்க வருவதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தவர். மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் குடும்பத்தினரை கொலை செய்ய வேண்டும் என்றும் இணையதளத்தின் ஒரு பகுதியை கூட தேவைபட்டால் முடக்க வேண்டும் என்றும் கருத்து கூறியவர். பெரும்பாலும் மனநோயாளி போன்றே நடந்துகொள்ளும் இவர் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராக உள்ளார் என்பது தான் வேதனை.

இந்த கருத்து கணிப்பு அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க போகும் மக்களில் 30% நபர்களின் அறிவுத்திறனையும் எண்ண ஓட்டத்தையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இது போன்றதொரு 30% நபர்களின் செயலினால் இன்று இந்தியாவின் நிலை என்ன என்பதை நாம் உணர்ந்து வருகிறோம்.

Comments are closed.