அலாவுதீன் கில்ஜி- தொடர்

0

அலாவுதீன் கில்ஜி

தில்லியைக் கைப்பற்றியவுடன் அலாவுதீன் கில்ஜி, டில்லி பிரபுக்களை, மேட்டுக்குடியினரைச் சமாதானப்படுத்தி ஆட்சியினை ஏற்றுக் கொள்ளும் படியாகச் செய்வதே மதிநுட்பம் வாய்ந்த செயலெனக் கருதினார்.

ஜலாலி பிரபுக்களான தாஜுதின் குசி, அமாசி அக்குர்பெக், அமீர் அலி திவாகு, உஸ்மான் அமீர் அகுர், அமீர் கலான், உமர் சுக்ரா, ஹிரன்மர் ஆகியோருக்கு உயர்பதவி அளித்தார். அவர்களையும் தமது ஆதரவாளர்களையும் இணைந்து ஒரு கூட்டு அமைச்சசரவையை அமைத்தார். அவரது கூட்டு அமைச்சரவை மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டதாக இருந்தது.

* தொடர்ந்து பதவியிலிருந்து வந்த முந்தைய துருக்கிய பிரபுக்கள்;

* தன் பக்கம் சேர்ந்து கொண்ட ஜலாலி பிரபுக்கள்

* அலாவுதீன் கில்ஜி நியமித்த அதிகாரிகள்

ஜலாலுத்தீன் கில்ஜி காலத்தில் வசீர் (பிரதம அமைச்சர்) ஆகப் பணிபுரிந்த குவாஜா காதீர் தொடர்ந்து வசீராகப் பணியாற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார். காசி சத்ருத்தீன் அரிஃப்பிற்கு இரண்டு பதவிகள் தரப்பட்டன. சாதர் – இ – ஜஹான் அதிகம் படிக்காதவர்; ஆனால் அடிமட்டத்தில் நடைபெறுகின்ற தில்லு முல்லுகளை அறிந்தவர்; அரசினை எவரும் ஏமாற்றாதவாறு பார்த்துக் கொள்ளும் வகையில் அவருக்கு தலைமை காஜி பதவி அளிக்கப்பட்டது. பிரதம நீதிபதி மாலிக் உம்தத் உல்முக் அரசாங்கச் செயலாளராக (தலைமைச் செயலாளர்) பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

மலிக் உம்தத்உல் முக்கின் பிள்ளைகள் ஹமீத் உத்தீன், நீதிமன்ற மேற்பார்வையாளராகவும், அயிஸ் உத்தீன் போக்குவரத்துத்துறை மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டனர். ஜலாலுத்தீன் கில்ஜி காலத்தில் பதவியில் இருந்த சையத் அஜல், ஷெய்க்உல் இஸ்லாம் கதீப் ஆகியோர் தொடர்ந்து அதேபதவிகளை வகித்தனர். நஸ்ரத்கான் ஜலேஸ்ரி கொத்வாலாக (நகரப் பொருப்பாளர்) நியமிக்கப்பட்டார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.