அலாவுதீன் கில்ஜி

0

இரஜபுத்திரர்களை வென்று இராஜஸ்தானை நிரந்தரமாக டில்லியுடன் இணைத்து ஆட்சி செய்யவே அலாவுதீன் கில்ஜி போர் ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை நாம் திடமாகக் கூற இயலாது.

இராஜஸ்தானிலிருந்த ஒரு சில பகுதிகளை மட்டுமே அவர் தில்லியுடன் இணைக்க முயற்சித்தார். அம்முயற்சியும் தோல்வியுறவே அந்த எண்ணத்தை முற்றிலுமாக அலாவுதீன் கில்ஜி கைவிட்டார். அவர் காலத்தில் இராஜஸ்தான் முக்கியமான இடத்தைப் பெற்றிராமையே அலாவுதீன் கில்ஜியின் புறக்கணிப்பிற்கு ஒரு காரணம் ஆகும். இராஜஸ்தானத்து கொள்கையால் பெரும் பொருள் நஷ்டம்; போர் ஏற்பாடுகளுக்குப் பெரும் பணச் செலவு; ஆனால் அங்கிருந்து பெற்ற பொருட்களோ மிகக் குறைவு. ஆனால் அந்தப் படையெடுப்பு அவரது பெருமையை மிகவும் உயர்த்திவிட்டது. அவரது முழுப் பலத்தையும் வெளிப்படுத்தியது. வட இந்தியா முழுவதையும் டில்லியின் கீழ் ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு இது ஊக்கமளித்தது.

இரஜபுத்திரர்கள் தோல்விக்கு பல காரணங்கள்; அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை; அலாவுதீன் கில்ஜியை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளும் அளவிற்கு தனித்துவம் வாய்ந்த இரஜபுத்திர அரசர்கள் எவரும் அவர் காலத்தில் இல்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Leave A Reply