அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

அலாவுதீன் கில்ஜியின் துவக்க கால ஆட்சியில் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் நடந்தன. கி.பி. 1299இல் நஸ்ரத் கான் தலைமையில் குஜராத் மீது படையெடுப்பை நடத்திட உத்தரவிட்டார். இப்படையெடுப்பு குறித்து முன்பே விளக்கியுள்ளோம். குஜராத் படையெடுப்பின் போது கிடைத்த பொருட்களின் பெரும் பகுதியை படைவீரர்களே மறைத்து வைத்துக் கொண்டனர். சுல்தானுக்குச் சேர வேண்டிய பொருளைக் கேட்டதால் படையில் கலகம் ஏற்பட்டது. அதில் புதிதாக வந்த முஸ்லிம்கள் பெருவாரியாக ஈடுபட்டனர். முஹம்மது ஷா, கப்ரூ, யல்ஹக், புர்ராக் ஆகியோர் தாங்கள் அபகரித்த பொருட்களை அலாவுதீன் கில்ஜியிடம் சேர்க்க மறுத்தனர். இன்னும் பல புதிய முஸ்லிம்கள் இதே நிலையில் இருந்தனர். இது குறித்த விவரங்களை யஹியா தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். (Yahya, Tariki-iMukarak Shalu. Page 76) அலாவுதீன் கில்ஜிக்குச் சேர வேண்டிய பொருட்களை அபகரிக்க முயன்ற அனைவரும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்டனர்.

அலாவுதீன் கில்ஜிக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர்கள் புதிய முஸ்லிம்கள். இவர்கள் அடக்கப்பட்டனர்.

அக்கத்கானின் கலகம்

கிரண் தம்பார் நோக்கி அலாவுதீன் கில்ஜி படையெடுத்துச் சென்றபோது வழியில் வேட்டையாடச் சென்றார். பழைய டில்லியில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள கிழுக்காரிக்குத் தெற்கே உள்ள தில்பெத் என்ற இடத்தில் தங்கியிருந்தார். பகல் பொழுது கழிந்தது. இரவு நேரம். தமது குதிரை வீரர்களை அனுப்பி வேட்டைக்கான மிருகங்களைத் தம்மை நோக்கி வரும்படி மறுநாள் காலையில் துரத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். அலாவுதீன் கில்ஜியின் காலஞ் சென்ற தம்பி முஹமதுவின் மகன் அக்கத்கானும் அவனோடு புதிய முஸ்லிம்கள் சிலரும் அங்கு வந்தனர். யாதொரு பாதுகாப்பின்றி அலாவுதீன் கில்ஜி தன்னந்தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தார் அக்கத்கான். பேராசை பொங்கியது. அலாவுதீன் கில்ஜியைக் கொன்று விட்டு தானே அரசராக ஆகி விட இதுவே தக்க தருணம் என எண்ணினார். அலாவுதீன் கில்ஜியைக் கொல்ல அம்புகளால் தாக்கினார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


செ. திவானுக்கு பெரியார் விருது

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், வரலாற்று ஆய்வாளர் நெல்லை செ. திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், தக.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர் சென்னை, ஜனவரி 16 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செ. திவானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Comments are closed.