அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

சென்னை பிராட்வே வாமன் பிரஸில் அச்சிடப்பட்டு வெளிவந்த பழைய நூல் (ஆண்டு தெரியவில்லை) ‘வீரபத்தினிமார்’ (இரண்டாம் பாகம்). அதில் முதல்கதையே ‘பத்தினி பத்மினி’ குறித்துதான்.

அதில் பக்கம் 1இல் பதின்மூன்றாம் நூற்றாண்டிலே டில்லியிலே ஏகசக்கராதி பதியாக விளங்கியவன் அல்லாவுதீன். அவன் பெயரும் புகழும் படைத்தவன். சேனையுடன் சென்றவிடமெல்லாம் சிறப்பெய்தியவன். நாடு பிடிப்பதில் அவனுக்கு இருந்த ஆசைக்கு அளவு கிடையாது. பீமனது மனைவி  பத்மினி (பக்கம் 2) என்றும் பக்கம் 15இல் பன்னிரெண்டு வருஷகாலம் கடும் போர் நடந்த பின்பு சித்தூர்க் கோட்டை சிதறி வீழ்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் சரித்திர உண்மைகளா? 12 வருஷங்கள் என்பது சரியா? சிந்திக்க வேண்டுகிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ‘பத்மினி ஒரு தீரரமணியின் சரிதை’ எனும் நூல் வெளிவந்தது. லலித விலாத புஸ்தக சாலையில் திருவல்லிக்கேணி, சென்னையில் 3 அணா விலையில் 1914இல் நான்காம் பதிப்பு 30 பக்கங்களில் வெளிவந்த நூல் அது. வரகவி திரு. அ. சுப்பிரமணியபாரதி இயற்றியது. (இது மகாகவி பாரதியார் அல்ல) பக்கம் 6இல் ராணி பத்மினியின் கணவன் பீமன்சிங் என்கிறார். பின் மாலிக் முகம்மது ஜயாஸியின்  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.