அலாவுதீன் கில்ஜி

0

அலாவுதீன் கில்ஜி

ஜலாலுத்தீனுடன் வந்தவர்கள் ஆயுதங்களைத் தூக்கி எறிந்தனர். சுல்தானது படகு கரையை நெருங்கியது. அங்கு அலாவுதீனின் படைகள் அணிவகுத்து நின்றது. யானைகளும் குதிரைகளும் போர் செய்யத் தயாராக கவசங்கள் பூட்டப்பட்டிருந்தன. இதனைப்பற்றி அல்மாஸ்பெக்கிடம் கேட்டபோது, ‘ஜலாலுத்தீனை அரசருக்குரிய மரியாதையுடன் வரவேற்று தாம் கொண்டு வந்த பொருட்களை, செல்வத்தை அவர் காலடியில் சமர்ப்பணம் செய்வதே அலாவுதீனின் நோக்கம்’ என்று கூறினார். இதனையும் ஜலாலுத்தீன் நம்பி, சொந்த மகன் வீட்டிற்குச் செல்லும் தந்தையைப் போல, சந்தேகமோ, அச்சமோயின்றி கரையை அடைந்தார்.

படகு கரையை அடைந்தது. அலாவுதீன் மகிழ்ச்சி பொங்க ஜலாலுத்தீன் காலடியில் விழுந்து வணங்கினார். அலாவுதீனைத் தூக்கி மார்போடு அணைத்து பாச உணர்ச்சி பொங்க பேச ஆரம்பித்தார்.

“குழந்தைப் பருவத்திலிருந்து உன்னை வளர்த்துள்ளேன். இப்போது நீ பெரியவனாகி விட்டாய். பதவி உயர்வைக் கொடுத்தேன். இவையனைத்தும் உன்னைக் கொல்வதற்காகவா நான் செய்தேன்? என்னுடைய பிள்ளைகளைக் காட்டிலும் நீ என்னிடம் அன்பாக நடந்து வந்திருக்கிறாய். உலகம் மாறலாம்; ஆனால் உனக்கும் எனக்கும் உள்ள உறவு மாறாது. உன்பால் எனக்கு ஏற்பட்டிருக்கும் பாசமும் குறையாது” என்றார்.

பிறகு அலாவுதீனுடைய கைகளைப்பற்றிக் கொண்டு படகு நோக்கிச் சென்றார். பரணியின் கூற்றுப்படி, நஸ்ரத்கான் சமிக்ஞை செய்தார். அருகிலிருந்த மஹ்மூத் சலீம் ஜலாலுத்தீனை தனது வாளால் வெட்டினார். மறுமுறையும் தாக்கினார். ஜலாலுத்தீன் கில்ஜி படகை நோக்கி கூக்குரலிட்டவாறே ஓடினார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.