அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

0

அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

உலகில் வேறு எந்த நூலுக்கும் காணப்பட முடியாத ஏழு தனிப்பெரும் பண்புகள் அல்குர்ஆனுக்கு உள்ளன. அதில் ‘அல்குர்ஆன் ஒரு தெய்வீக நூல்’ என்ற முதலாவது பண்பை புதிய விடியல் ஜனவரி 1&15, 2019 இதழில் கண்டோம். இந்த இதழில் அதன் இரண்டாவது தனிப்பெரும் பண்பை காண்போம்.

பாதுகாக்கப்பட்ட நூல்

அல்குர்ஆன் முழுமையாக இறைவனால் பாதுகாக்கப்படும் ஓர் இறைவேதம் என்பது அதன் தனித்துவங்களில் ஒன்றாகும். முந்தைய இறைவேதங்களை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்காமல் அக்கால மக்களிடமே வழங்கியிருந்தான். அதனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

“அல்லாஹ்வுடைய வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.” (அல்மாஇதா : 44)

ஆனால் இறுதி வேதமும் முழு மனித குலத்துக்குமான வேதமான அல்குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டுள்ளான்.

“நாமே இந்த வேதத்தை இறக்கிவைத்தோம். நாமே அதனை பாதுகாப்போம்.” (ஹிஜ்ர் : 09)

& என்பதாக அல்குர்ஆனில் அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்.

இறைவேதம் பாதுகாக்கப்படுகிறது என்பது அதன் வசனங்கள் எவ்வித திரிபுகளுக்கும் கையாடல்களுக்கும் உட்படாது அதன் தெய்வீகத் தன்மை தூய்மையாக பாதுகாக்கப்படுவதை குறிக்கும்.

முன்னைய வேதங்களான தௌராத், இன்ஜீல் என்பன ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் பல திரிபுகளுக்கும் மனிதக் கையாடல்களுக்கும் உட்பட்டு அதன் தெய்வீகத் தன்மையை இழந்திருப்பதனை நாம் காணலாம். இந்த வேதங்களுக்கு வரலாறு நெடுகிலும் ஏற்பட்ட சவால்களை முறியடிப்பதற்கான ஆற்றலை வேதம் வழங்கப்பட்ட மக்கள் இழந்திருந்ததுடன், அப்பொறுப்பை அவர்கள் சரிவர நிறைவேற்றுவதில் தவறிழைத்துவிட்டனர். எனவே அவ்வேதங்களின் வசனங்களும் கருத்துகளும் திரிபுகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இட்டுக்கட்டப்பட்ட போலி வசனங்கள் வேத வசனங்களாக மாற்றப்பட்டன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.