அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

0

அல்குர்ஆனின் தனிப்பெரும் பண்புகள்

  1. முழு மனித வாழ்வுக்குமான நூல்

மனித வாழ்வின் சகல பகுதிகளையும் சீர்செய்து ஒரு கட்டுக்கோப்பான, வெற்றிகரமான வாழ்வை மனிதனுக்கு உலகிலும் மறுமையிலும் ஏற்படுத்துவது அல்குர்ஆனின் முதன்மை இலக்காகும். எனவே மனித வாழ்வியலுக்கான முழு மொத்த வழிகாட்டலையும் அல்குர்ஆன் சுமந்துள்ளது.

அதனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“சகல காரியங்களையும் தெளிவுபடுத்தக் கூடிய வேதத்தை நாம் உம்மீது இறக்கி வைத்தோம்.”

(அந் நம்ல்:89)

வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும், விரிவாகவும் சுருக்கமாகவும், திட்டவட்டமான அமைப்பிலும், அல்குர்ஆன் பேசுகின்றது. எனவே மனித வாழ்வுக்கான எந்தவொரு பகுதியிலும் அல்குர்ஆன் இடைவெளியை விடாமல், சகல அம்சங்களுக்கும் வழிகாட்டுகிறது. இதனால்தான் இஸ்லாமிய ஷரீஆவின் ஏனைய மூலாதாரங்களான சுன்னா, இஜ்மா, கியாஸ், மஸ்லஹா முர்ஸலா போன்ற அனைத்து மூலாதாரங்களும் அல்குர்ஆனிய அஸ்திவாரத்தின் மீது அமைந்ததாகவும், அல்குர்ஆனின் ஒளியை சுமந்ததாகவும் இருப்பதனை காணலாம்.

ஏனைய எந்தவொரு நூலிலும் காண முடியாத இன்னொரு சிறப்பம்சம் அல்குர்ஆனுக்கு உள்ளது. அது ஏனைய நூல்களைப் போன்று தலைப்பு வாரியாக அல்லது பிரத்தியேக அத்தியாயங்கள் வாயிலாக வாழ்வியல் பகுதிகளை தனித்தனியாக பேசுவதில்லை. வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், மறுமையுடன் தொடர்பானவை, குற்றவியல் சட்டங்கள், ஒழுக்க விழுமியங்கள் என எந்தவொரு பகுதிக்குமான தனித்தனியான அத்தியாயங்களை அல்குர்ஆனில் கண்டுகொள்ள முடியாது. மாறாக ஒரு அத்தியாயத்தில் மிகவும் நுட்பமான முறையில் வாழ்வியல் அம்சங்களை தொடர்புபடுத்தி மிகவும் தெளிவாகவும் அழகாகவும் அல்குர்ஆன் அவற்றை முன்வைக்கின்றது. இது அல்குர்ஆனிய அத்தியாயங்களின் பொதுப் பண்பாக இருப்பதுடன், மக்கா காலத்தில் இறங்கிய ஒரு சில சிறிய அத்தியாயங்கள் மாத்திரம் இறை நம்பிக்கை, மறுமை போன்ற அடிப்படை அம்சங்களில் முழுமையாக கவனம் செலுத்துவதனை விதிவிலக்காக கண்டுகொள்ளலாம்.

அல்குர்ஆன் முழு வாழ்வுக்குமான நூல் என்ற சிறப்பம்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனை ஏனைய நூல்களைப் போன்று ஒரு குறிப்பிட்ட துறையுடனோ பகுதியுடனோ இணைத்துவிட முடியாது. அல்குர்ஆனை அறிவியல், விஞ்ஞான ரீதியாக நோக்கினால் அது மகத்தான பல அறிவியல் உண்மைகளைப் பேசும் அறிவியல் நூலாகக் காட்சியளிக்கும். அதேபோன்று இலக்கிய ரீதியான பார்வையில் ஓர் இலக்கிய நூலாகவும், சமூகவியல் பார்வையில் சமூகவியல் நூலாகவும் காட்சியளிக்கும். ஆனால் அல்குர்ஆன் அவை எந்தவொரு பகுதியையும் சார்ந்த ஒரு நூல் அல்ல.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.