அல்ஜீரியாவில் மக்கள் எழுச்சி

0

அல்ஜீரியாவில் மக்கள் எழுச்சி

அதிகார போதை தலைக்கேறியவர்கள் அப்போதையில் இருந்து எளிதாக மீள்வதில்லை. வரலாறு இதனை நித்தமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதன் சமீபத்திய உதாரணம்தான் அல்ஜீரியாவின் அதிபர் அப்துல் அஜீஸ் பூதல்பிகா. இருபது ஆண்டுகள் பதவியில் இருந்த போதும் அதிகாரத்தை கைவிடாமல் இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். 2013ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தனது வாழ்க்கையை நடத்தி வரும் 82 வயதான அப்துல் அஜீஸ், மக்கள் முன் காட்சி தருவது மிகவும் குறைவு என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அவ்வப்போது வெளியிடப்படும் புகைப்படங்கள் மூலம்தான் மக்கள் தங்கள் அதிபரை காண்கின்றனர். அதிபர் கடைசியாக ஏழு வருடங்களுக்கு முன்னர் மக்களிடம் நேரடியாக உரையாற்றினார்.

அரசியல் சாசனத்தின் 102வது பிரிவின் படி, உடல்நிலை சரியில்லாத ஒருவர் அதிபராக தொடர முடியாது என்று அதிபருக்கு எதிரானவர்கள் சுட்டிக் காட்டினாலும் அதிபர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அவருடன் இருப்பவர்கள் மக்களை நம்பச் சொல்கின்றனர். ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அதிபர் தேர்தலில் தான் ஐந்தாவது முறையாக போட்டியிடவுள்ளதாக அப்துல் அஜீஸ் அறிவித்த போது மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வீதிகளுக்கு வந்தனர்.  2010ஆம் ஆண்டின் இறுதியில் வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்காசிய நாடுகளில் நடைபெற்ற அரபுலக வசந்தத்தை ஒத்ததாக அல்ஜீரிய மக்களின் போராட்டம் அமைந்தது. அதிகாரத்தை நிரந்தரமாக சுவைக்க துடிக்கும் ஒரு கும்பல், அப்துல் அஜீஸ் என்ற கருவியை பயன்படுத்தி வருகிறது.

மூன்று வாரங்கள் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அப்துல் அஜீஸ் அறிவித்தார். ஆனால் நடைபெறயிருந்த அதிபர் தேர்தலையும் ஒத்திவைத்தவர், அரசியல் சாசன சீர்திருத்தங்களை மேற்கொண்ட பிறகு இவ்வருட இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதிகாரத்தை தொடர்ந்து தன் கைவசம் வைத்திருப்பதற்கான அதிபரின் சூழ்ச்சியே இந்த அறிவிப்பு என்று கூறியுள்ள போராட்டக்காரர்கள், அதிபரின் இந்த பித்தலாட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதுடன் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் நூருத்தீன் பதோய் அமைத்துள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை அதிபர் தனது அதிகாரத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “எங்களை புரிந்து கொள்வதாக நீங்கள் நடிக்கிறீர்கள், உங்களுக்கு செவி சாய்ப்பதாக நாங்கள் நடிக்கிறோம்” என்ற பதாகைகளுடன் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.