அவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? – பல்கீஸ் பானு

0

 

2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மறக்க முடியாத பெயர் பல்கீஸ் பானு.கொடூரமாக தாக்குதல் நடத்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் பல்கீஸ் பானுவின் கண் முன்னால் வைத்து அவரது தாயார், மகள் உள்பட 14 பேரை கொலைச் செய்தனர்.பெண்களை கொடூரமாக வன்கொடுமைச் செய்து கொலைச் செய்தனர்.எழுந்து நடக்க கூட இயலாதபோதும் இச்சம்பவங்களை குறித்து புகார் அளிக்க பல்கீஸ் பானு தைரியம் காட்டினார்.குற்றவாளிகளுக்கு 2008-ஆம் ஆண்டு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.பா.ஜ.க தலைவர் சைலேஷ் பட் உள்பட 12 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
13 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நிகழ்ந்த அநியாயம் குறித்து பல்கீஸ் பானு கூறிய கருத்துக்கள் ’இந்தியன் கோட்ஸ்(Indian Quotes)’ என்ற ஃபேஸ் புக் பேஜில் வெளியாகியுள்ளது.
அவர் கூறியிருப்பது:
“எனது குடும்பத்தைச் சார்ந்த 4 ஆண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.பெண்கள் ஆடைகள் களையப்பட்டு பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டனர்.என்னையும் அவர்கள் பிடித்தார்கள்.எனது 3 வயதான மகள் சலேஹா எனது கையில் இருந்தாள்.எனது கையில் அவளை பறித்து தூக்கி வீசினார்கள்.அந்த பிஞ்சுக் குழந்தையின் தலை ஒரு கல்லில் பட்டு சிதறியபோது எனது இதயமே தகர்ந்துவிட்டது… நான்கு பேர் எனது கை,கால்களை பிடித்து வைத்திருந்தனர்.பின்னர் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக எனது உடலை உபயோகித்தனர்.அவர்களது ஆசை தீர்ந்த பிறகு காலால் உதைத்தனர்.தலையில் தடியால் அடித்தனர்.நான் இறந்துவிட்டதாக கருதி என்னை அவர்கள் அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றார்கள்.
அக்கிரமக்காரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் ஏசினர்.அந்த வார்த்தைகள் என்னவென்று என்னால் கூற இயலாது.எனது தாய், சகோதரிகள், 12 உறவினர்கள் ஆகியோரை அவர்கள் என் கண் முன்னால் கொலைச் செய்தனர்.பாலியல் ரீதியாக ஆட்சேபிக்கும் வார்த்தைகளை அவர்கள் எங்களை தாக்கும்போது பயன்படுத்தினர்.நான் ஐந்து மாத கர்ப்பிணி என்று கூட என்னால் கூற இயலவில்லை.காரணம், அவர்களது கால்களை எனது கழுத்த்லும், வாயிலும் வைத்து அழுத்தினர்.
எனது மானத்தை சீர்குலைத்தவர்களை குற்றவாளிகளாக கண்டறிந்தும் சிறையில் அடைத்ததெல்லாம் அவர்களது வெறுப்பை குறைத்து விடும் என்பது பொருளல்ல.எனினும் நீதியால் வெற்றி பெற முடியும் என்பதை அது நிரூபிக்கிறது.எத்தனையோ காலங்களாக என்னை மானபங்கப்படுத்தியவர்களை எனக்கு தெரியும்.அவர்களுக்கு நாங்கள் பால் விற்பனைச் செய்து வந்தோம்.அவர்களுக்கு வெட்கம் இருந்திருந்தால் என்னோடு இவ்வாறு நடந்திருப்பார்களா?… அவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? – பல்கீஸ் பானு கேட்கிறார்.

Comments are closed.