அவுரங்கசீப் சாலை அப்துல் கலாம் சாலையாகிறது

0

டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையை அப்துல் காலம் சாலை என்று மாற்றுவதற்கு டெல்லி முனிசிபல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
‘அவுரங்கசீப் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு அவரின் குரூரமும் சித்திரவதைகளும்தான் நமது நினைவிற்கு வருகிறது.மறுபுறம் அப்துல் கலாம் தேசத்தின் மீதான் அவரின் அன்பு மற்றும் அவரின் கருணை மற்றும் விசாலமான தன்மை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார்.வரலாற்றின் தவறுகளை நாம் மாற்ற வேண்டும்’ என்று சில தினங்களுக்கு முன் கிழக்கு டெல்லி தொகுதியின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மகேஷ் கிர்ரி சில தினங்களுக்கு முன் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
முனிசிபல் கவுன்சிலின் இந்த முடிவை அதன் உறுப்பினரும் முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். ஆனால் சமூக ஆர்வலர்களும் வரலாற்று அறிஞர்களும் இந்த முடிவை வன்மையாக கண்டித்துள்ளனர்.வரலாற்றை மாற்றவோ திருத்தவோ முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed.