அஸ்ஸாமில் பீப் விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த பயங்கரவாதிகள்

0

அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவரிடம் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதா என மிரட்டியுள்ளனர். அவரும் உரிமம் இருப்பதாக கூறிய நிலையில், வங்கதேசத்திலிருந்து வந்தவனா நீ? உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா? என கேட்ட அந்த கும்பல் தங்களிடம் இருந்த பன்றிக்கறியை சௌக்கத் அலியின் வாயில் வைத்து அழுத்தி சாப்பிட கட்டாயப்படுத்தியது. இஸ்லாத்தில் பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளாதால் சௌக்கத் அலியும் அதனை உண்ண மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் முதியவர் என்றும் பார்க்காமல் அவரை ரத்தம் சொட்ட சொட்ட அடித்துள்ளனர்.

இதுகுறித்து சௌக்கத் அலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தெரிவுத்துள்ள போலீசார், சௌக்கத் அலி கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் பீஃப் ஸ்டால் நடத்தி வருவதாகவும், அவர் இந்தியர் தான் என்றும் கூறினர்.

அசாம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் மீது பசு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இதில் உயிரிழந்தவர்கள் பலர்.

Comments are closed.