அஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்

0

அஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்

அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் பகுதியில் சௌக்கத் அலி என்ற 68 வயது முதியவர் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது அவரை சுற்றிவளைத்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவரிடம் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கான உரிமம் உள்ளதா என மிரட்டியுள்ளனர். உரிமம் உள்ளதாக கூறிய நிலையில், ‘வங்கதேசத்திலிருந்து வந்தவனா நீ? உன்னிடம் தேசிய குடியுரிமை சான்று உள்ளதா?’ என கேட்ட அந்த கும்பல் தங்களிடம் இருந்த பன்றிக்கறியை சௌக்கத் அலியின் வாயில் திணித்து சாப்பிட கட்டாயப்படுத்தியது.

இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அந்த இந்துத்துவா பயங்கரவாதிகள் முதியவர் என்றும் பார்க்காமல் அவரை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துள்ளனர்.

இதுகுறித்து சௌக்கத் அலியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து தெரிவித்துள்ள காவல்துறையினர், சௌக்கத் அலி கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் மாட்டுக்கறி கடை நடத்தி வருவதாகவும், அவர் இந்தியர்தான் என்றும் கூறினர்.

பா.ஜ.க. தலைவர் வீட்டில் ஏராளமான

வெடிகுண்டுகள்,

துப்பாக்கிகள் பறிமுதல்!

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கேனே நாடாளுமன்ற தொகுதிக்கு மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தலின் போது நாசவேலைகளில் ஈடுபட பா.ஜ.க.வினர் திட்டம் தீட்டி உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்தலில் கலவரம் ஏற்படலாம் என்ற தகவலை தொடர்ந்து, மாநில காவல் துறையினர் சேத்வா டவுன் பகுதியை சேர்ந்த பாஜக தலைவர் சஞ்சய் யாதவுக்கு சொந்தமான வீட்டில் மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.17 சக்தி மிகுந்த வெடிகுண்டுகள், 10 கைத்துப்பாக்கிகள் மற்றும் 111 தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கிகள் அனைத்தும் வெளிநாட்டை சேர்ந்தவை என்றும், இது தொடர்பாக, சஞ்சய் யாதவ், சாஹர் சவுத்திரி, தீபக், ஹிரிதிக் ஆகியோர் மீது வெடிகுண்டு பதுக்கிய குற்றப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் ஏதேனும் கலவர வேலைக்கு திட்டமிட்டுள்ளரான என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சஞ்சய் யாதவ் மீது நீதிமன்றத்திற்குள் சென்று எதிராளி மீது துப்பாகி சூடு நடத்திய குற்றச்சாட்டு உள்பட 47 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் சஞ்சய் யாதவ், தனது சேகாதரர் ஜிட்டு மற்றும் தாயார் பசந்திபாய் யாதவ் உடன் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சேத்வா நகராட்சிக்கு அவரது தாயார் பசந்திபாய் போட்டியிட்டார்.

சஞ்சய் யாதவ் மீதுள்ள பயம் காரணமாக அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவரது தாயார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. கூட்டத்தின் முன் வரிசையில்

கொலை குற்றவாளி!

உத்தர பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ள பிஷாரா என்ற இடத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று முகமது அக்லாக்கை இந்துத்துவ கும்பல் தாக்கி படுகொலை செய்தது. மாட்டுக்கறியை சாப்பிட்டதற்காக அவரை கொலை செய்தததாக கொலை கும்பலில் இருந்தவர்கள் கூறினர். இந்த வழக்கில் தொடர்புடைய இந்துத்துவவாதிகள் 17 நபர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிஷாராவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த பேரணியில் அக்லாக்கை படுகொலை செய்த கும்பலில் இடம்பெற்றிருந்த விஷால் சிங் உள்ளிட்டவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அக்லாக் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது அவருடைய மகனையும் இந்துத்துவ கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பல மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். அக்லாக்கின் மற்றொரு மகனான சர்தாஜ் இந்திய விமான படையில் பணியாற்றுபவர். இத்தாக்குதலை தொடர்ந்து அக்லாக்கின் குடும்பத்தினர் மற்றும் அவரின் உறவினர்கள் பிஷாராவில் உள்ள சொந்த வீடுகளை காலி செய்து வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். அக்லாக்கின் குடும்பத்தினர் தலைநகர் டெல்லியில் வசித்து வருகின்றனர். பசு பயங்கரவாதத்தின் முதல் இலக்கான அக்லாக் படுகொலையில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த வீடுகளை துறந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் சர்மாவை ஆதரித்து பேசிய யோகி, ‘‘சமாஜ்வாதி அரசு கிராம மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி நடந்துள்ளது.  நரேந்திர மோடி அரசு அமைந்த பிறகு அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

கேரளா: என்.ஐ.ஏ. வழக்கில்

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை

கேகரள மாநிலம் பானாயிகுளம் என்ற இடத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்பட்ட கருத்தரங்கின் பெயரால் ஷாதுலி, அப்துல் ராஸிக், ஷம்மாஸ், அன்ஸார் நத்வி, நிஸாமுத்தீன் ஆகிய முஸ்லிம் இளைஞர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ ஏற்றுக்கொண்டது. கேரளாவில் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதல் வழக்கு இது.

இவர்கள் மீது என்.ஐ.ஏ தேசத்துரோக வழக்கை சுமத்தியது. பின்னர் என்.ஐ.ஏ. நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவருக்கு 14 ஆண்டுகள், இதர நபர்களுக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இத்தீர்ப்பு மூலம் என்.ஐ.ஏ. என்பது அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளை வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்ட முகமை என்பது நிரூபணமாகியுள்ளது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.