அஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு!

0

அஸ்ஸாம் மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளிக்கூடம் திறப்பு!

சபூரி பதார் என்பது அஸ்ஸாமின் பார்பட் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவுப்பகுதி. கவுஹாத்தியிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம் சாலையில் பயணம் செய்து, பின்னர் பிரம்மபுத்திரா நதியில் ஒரு மணி நேரம் படகுப் பயணம் செய்யும் தூரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட 1000 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் ஏறத்தாழ 500 குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் யாரும் பள்ளிக் கூடங்களுக்கு செல்வதில்லை. அங்கு அவர்களுக்கென்று கல்விக்கூடம் என்று இதுவரை எதுவுமில்லை.

இதனை கருத்தில் கொண்டு அஸ்ஸாம் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இந்த வருடத்திற்கான முதல் சர்வ சிக்ஷா கிராம் (ஷிஷிநி) திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட திறப்பு விழா நிகழ்ச்சி 2018 ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது. இந்த பள்ளி கூடத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் இ.எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த கல்வி கூடத்திற்கு அர்ப்பணிப்புள்ள 3 நிரந்தர ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதி எம்.ல்.ஏ. ஷெர்மான் அலி ஆகியோரின் உதவியுடன் 200 குழந்தைகளுக்கு அட்மிஷன் பதிவு செய்யப்பட்டு அந்த கிராமமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இது இந்த கிராமத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான துவக்கமாக அமைந்தது.

Comments are closed.