ஆக்சஸ் இந்தியாவின் மாநில தலைமை அலுவலக திறப்பு!

0

ஆக்சஸ் இந்தியாவின் மாநில தலைமை அலுவலக திறப்பு!

ACCESS INDIA இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு பல்வேறு திறன் மேம்பாடு, ஆளுமை மற்றும் ஊக்கத்திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்திவருகின்றது.

11.11.2018 தேசிய கல்வி தினத்தன்று தமிழகத்திற்கான ACCESS INDIA-வின் தலைமை அலுவலகம் திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள GMS COMPLEX திறக்கப்பட்டது. ACCESS INDIA-வின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் உளவியல் ஆலோசகர், C.K.. ராஷித் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இத்திறப்புவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள ACCESS INDIA-வின் பயிற்சியாளர்களுக்கு சிறப்புவகுப்புகள் நடத்தப்பட்டன. உளவியலாளர் டாக்டர் அற்புதநேசன், மேலூர் அர்ரஹ்மான் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் சதக்கதுல்லாஹ், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகம்மது ஃபயாஸ், ஆக்ஸஸ் பயிற்சியாளர்கள் முகம்மது ஜுனைத் மற்றும் ரியாஸ் ஆகியோர் வகுப்புகளை எடுத்தனர். ஆக்ஸஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் அல் அஸ்ஹர் மற்றும் இல்ம் பள்ளிகளின் தாளாளர் N.K.M. காதர் அலி நன்றியுறையாற்றினார்.

Comments are closed.