ஆக்சிஜனை சுவாசித்து அதையே வெளியிடும் ஒரே உயிரினம் பசு: ராஜஸ்தான் கல்வி அமைச்சர்

0

பசு மாடுகளின் பலன்கள் பட்டியல் நாளுக்கு நாள் பா.ஜ.க சங்க்பரிவார அமைப்பினரால் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. செல்போன் கதிர்வீச்சை மாட்டுச்சாணம் தடுப்பதில் இருந்து, பசு சிறுநீரில் தங்கம் இருப்பது வரையிலான பசுவின் பயன்களோடு தற்போது மேலும் ஒன்றை சேர்ந்துள்ளனர் சங்கபரிவாரத்தினர்.

ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனையே வெளியிடும் ஒரே உயிரினம் பசு மாடு என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்நாணி தெரிவித்துள்ளார். இதனை அக்ஷய பாத்திரா என்ற நிறுவனம் ஒருகிணைத்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது பசுவின் விஞ்ஞான பயன்களை சுடிக்காட்டிய போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பசுவின் அறிவியல் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளகூடிய தேவை உள்ளது என்றும் இந்த செய்தி அனைத்து மக்களையும் சென்றடைவதை நாம் உறுதி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்த கண்டுபிடிப்பு, 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின், Green House Gas  வெளியிடுவதில் பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கே அதிக பங்கு என்ற அறிக்கைக்கு சவாலாக அமைந்துள்ளது.

Comments are closed.