ஆக்ரா விமான நிலையத்தை தொடர்ந்து ரயில் நிலையத்தின் பெயரையும் மாற்றம் செய்யும் உபி அரசு

0

உத்திர பிரதேச அமைச்சரவை கடந்த செவ்வாய் கிழமையன்று முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீனதயாள் உபாத்யாயா பெயரில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு அதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் உபி அரசின் செய்தித் தொடர்பாளர் அமைச்சர் சித்தார்த் நாத் சிங், அமைச்சரவையின் ஒப்புதலோடு இந்த ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் குறித்த முன்மொழிதல் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த முகல்சராய் ரயில்நிலையம் கிழக்கு ரயில்வேயின் மிக பரபரப்பான ரயில் நிலையங்களுள் ஒன்று. கடந்த ஏப்ரல் மாதம் அதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆக்ரா விமான நிலையத்தை உபாத்யாயா பெயரில் மாற்றம் செய்ய முடிவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.