ஆங் சாங் சூகீ க்கு ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் வழங்கிய மனித உரிமைக்கான உயர்ந்த விருது பறிப்பு

0

ஆங் சாங் சூகீ க்கு ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் வழங்கிய மனித உரிமைக்கான உயர்ந்த விருது பறிப்பு

மியான்மாரின் முந்தைய இராணுவ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக பல வருடங்கள் போராடி தற்போது மியான்மாரின் ஆட்சியை நடத்திவரும் ஆங் சாங் சூகீ க்கு சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மனித உரிமைக்கான உயரிய விருதை 2012 ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது மியான்மாரில் ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை தடுக்காமலும் அதனை அவர் அவர் சிறிதும் கண்டுகொள்ளாத காரணத்தினால் அவருக்கு வழங்கிய தங்களது விருதை பறித்துள்ளது ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு.

இது குறித்து அவ்வமைப்பு தெரிவிக்கையில், “மியான்மாரில் அடக்குமுறைகளை செய்து வரும் இராணுவ ஆட்சியை விட்டு உங்களது பார்வையையும் சிந்தனையையும் எப்போதும் அகற்றிவிடாதீர்கள்” சூகீ என்று கேட்டுக்கொண்டார். அவரது ஆட்சிக்கு முன்னரும் அவரது ஆட்சியின் போதும் நாங்கள் எங்களது பார்வையை மியான்மரை விட்டு அகற்றிடவில்லை.

2016 ஆம் ஆண்டு அவர் மியான்மார் அரசின் தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் பின்னர் அச்சத்துடனும் அவரை கவனித்து வருகிறோம். ஆனால் அவர் சிறுபான்மை ரோகிங்கிய முஸ்லீம்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை தடுக்க அல்ல, அத்தகைய இனப்படுகொலை நிடப்பதை சூகீ அங்கீகரிக்க கூட இல்லை.

சூகீ பதவியில் உள்ள போது காசின் மற்றும் வடக்கு சான் மாநிலங்களில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் ஆவனப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. சூகீ அரசு அப்பகுதி மக்களின் துயர் துடைக்க வேண்டிய நிலையில் இராணுவத்துடன் இணைந்து மக்களை ஒதுக்கி அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை வழங்குவதை விட்டும் கூட மறுத்து வருகிறது.

இப்பகுதி மக்களுக்கு மியான்மார் அரசு அவர்களின் குடியுரிமை, அவர்கள் சுந்ததிரமாக நடமாடும் உரிமை, கல்விக்கான உரிமை ஆகியவற்றை மறுத்தும் அவர்கள் மருத்துவம் பெறுவதையும் கூட மறுக்கிறது என்றும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இன்னும் ரோகிங்கிய முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்றும் கற்பழிப்பவர்கள் என்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்புரை செய்து அவர்கள் போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் கூறுபவர்கள் என்றும் தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீ வைத்துக் கொள்பவர்கள் என்றும் கூறி அவர்களை சூகீ அரசு இழிவு படுத்துகிறது என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

மியான்மார் இராணுவத்தின் தலைமை தளபதி மின் ஆங் ஹிலைங்க் மற்றும் இராணுவம் மற்றும் காவல்துறைகளில் உள்ள மேலும் 12 உயர் அதிகாரிகள் மனித இனத்திற்கு எதிராக நடத்திய குற்றங்கள் குறித்து போதுமான ஆதாரங்களை சேகரித்து வெளியிட்டள்ளதாகவும் இதன் அடிப்படையில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் சூகீ க்கு வழங்கிய தங்களின் உயரிய விருதை திரும்பப் பெறுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இவருக்கு இந்த விருது வழங்கப்பட்ட போது சூகீ நம்பிக்கை மற்றும் வீரத்தின் சின்னமாகவும் மனித உரிமையின் பாதுகாவலராகவும் பார்க்கப்பட்டார் என்றும் ஆனால் சூகீ தன் மீதான அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை என்றும் மாறாக அவர் எந்த கொள்கைகளின் அடையாளமாக பார்க்கப்பட்டாரோ அவை அனைத்துக்கும் எதிரானவராக மாறிவிட்டார் என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மியான்மார் மக்களுக்கான நீதி போராட்டம் என்பது சூகீ யையும் தாண்டியது என்றும் இது அந்த நாடெங்கிலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் தொடரும் என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

Comments are closed.