ஆசாதின் ஆளுமை காங்கிரசிற்கு தேவை

0

ஆசாதின் ஆளுமை காங்கிரசிற்கு தேவை

அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினமான நவம்பர் 11 தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆசாத் கல்வியாளர் மட்டுமல்ல, நாட்டின்  நெருக்கடி காலகட்டங்களிலும், காங்கிரஸ் கட்சியை வழி நடத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

இன்று நமது நாட்டில் எதிர்கட்சியே இல்லாமல் ஆட்சி நடத்தி கொண்டிருக்கின்றனர். தேசத்தின் வளர்ச்சியும், முன்னேற்றத்திற்கும் எப்படி ஆளும் ஆட்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமோ, அதே போல் அரசிற்கு ஆலோசனை வழங்கவும், மக்கள் பிரச்சனைகளை பேசவும், விமர்சிக்கவும் எதிர் கட்சியினரின் பங்களிப்பும் அவசியம். ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் பல்வேறு உலக நாடுகளில், ஆளும் சபைகளில் எதிர் கட்சிகளுக்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்தியாவும் ஜனநாயக நாடுகளில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் கடந்த 2014ல் இருந்து செயல்பட்டு வருகின்ற பா.ஜ.க. அரசின் செயல்திட்டத்தில் எதிர் அணியினரே இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருந்தாலும், காங்கிரஸ் அதன் தோல்விகளில் இருந்து மீள்வதற்கான செயல் திட்டங்களை நோக்கி செல்ல மறுக்கிறது.

சுதந்திரத்திற்கு பின் நாட்டின் முதல் அரசை வழி நடத்திய பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. 70 ஆண்டுகள் ஆட்சியில் பங்கெடுத்தும், எதிர் கட்சியிலிருந்தும் நாட்டின் முக்கியமான காலகட்டங்களில் பங்காற்றிய காங்கிரஸ் அதன் வலிமையை இழந்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.