ஆசாராம் பாபு ஆட்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்கள் : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை

0

தன்னிடம் வரும் பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததற்காக சிறை சென்றுள்ள ஆசாராமின் ஆட்கள் அவர் மீது புகாரளித்த பெண்ணின் குடும்பத்தை மிரட்டி வருவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். “இவர்களின் மிரட்டலினால் எங்களின் மொத்த குடும்பமும் பயத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

“ஏற்கனேவே பல சாட்சிகளை குறிவைத்து  தாக்கியது போல அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம். இந்த அச்சத்தினால் எங்கள் குழந்தைகள் பள்ளி செல்வதையும் நிறுத்திவிட்டனர்” என்று கூறியுள்ளார்.

தற்பொழுது வழக்கின் விசாரணைக்காக ஜோத்புருக்கு தான் வந்துள்ளதாக கூறிய அவர், POSCO ACT இன் படி இந்த வழக்கின் விசாரணை ஓர் ஆண்டிற்குள் முடிக்கப்பட்டிருக்க வண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்து இன்னும் நீண்டுகொண்டிருக்கிறது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபுவின் ஆட்கள் காதலர் தினத்தை பெற்றோர்களை நேசிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.