ஆசாராம் பாபு பிணை மனு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

0

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவின் பிணை மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது ஆசாரம் பாபு வழக்கில் தள்ளுபடி செய்யப்படும் 9 வது பிணை மனுவாகும்.

இவரது பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நிர்மல் ஜீத் கவுர், ஆசாராம் பாபு மீதான வழக்கு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் தற்போது பிணை வழங்குவது சரியாக இருக்காது என்றும் கூறியுள்ளது.
மேலும் ஆசாரம் தரப்பில் இருந்து இவ்வழக்கு நீண்டுகொண்டே போகிறது என்று கூறப்பட்டதர்க்கும் அரசு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசாரம் பாபு நடத்தும் ஆசிரமத்தில் மாணவியாக இருந்த ஒரு பெண் ஆசாரம் பாபு தன்னை கற்பழித்தார் என்று புகாரளித்ததன் பேரில் ஆசாராம் பாபு 2013 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

Comments are closed.