ஆசிஃபா பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 பேர் குற்றவாளியென தீர்ப்பு

0

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் கடந்த 2018 ஜனவரியில் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து,  கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 8 பேர் குற்றவாளிகள் என நிறுபனமாகி கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் கைதை கண்டித்து, அந்த மாநிலத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கைது செய்த 8 பேர் மீதும் ஜம்மு காஷ்மீர் மாநில கிரைம் பிரிவு காவலர்கள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில், இந்த வழக்கை விசாரித்த பதன்கோட் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் குற்றஞ்சாட்டப் பட்ட ஏழு பேரில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் கிராம தலைவர் சஞ்சி ராம், இரண்டு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தீபக் காஜுரியா, சுரேந்தர் வர்மா மற்றும் தலைமை காவலர் திலக் ராஜ் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது.

Leave A Reply