ஆசிஃபா பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

0

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த 2018 ஜனவரி மாதம் ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வங்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு காட்டுப்பகுதியில் சடலமாக கண்டறியப்பட்டார்.

அந்த சிறுமியை பிரேத பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தியாவை உலுக்கிய இந்த பாலியல் கொடூர விவகாரத்தில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதன்பிறகு நடந்த விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நான்கு நாள்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பிறகு சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொடூர குற்றவாளிகளை போலீஸ் காப்பாற்ற முயற்சிப்பதாக தெரியவந்தது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம்.

இதில் ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராம் ,தீபக், பர்வேஸ் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது பதான் கோட் நீதிமன்றம். மேலும் உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த தத்தா, சுரேந்தர் வர்மா, தலைமைக் காவலர் திலக் ராஜ் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊர் தலைவரும் பூசாரியுமான சஞ்சி ராமின் மகன் விஷாலை விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது பதான் கோட் நீதிமன்றம்.

Comments are closed.