ஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு அரசு பதவி

0

ஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு அரசு பதவி

கஷ்மீரில் மெஹ்பூபா முஃப்திக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை அது விலக்கிக் கொண்ட நிலையில் தற்போது ஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞருக்கு பாஜக அரசு பதவி வழங்கியுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

8 வயது சிறுமியை கடத்தி பல நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலாதாகாரம் செய்தவர்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அசீம் சாவ்னியை மாநில அட்டார்ணி ஜெனராலாக நியமித்துள்ளது பாஜக. ஜூன் 20 முதல் கஷ்மீர் மாநிலம் ஆளுநர் ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ள மெஹ்பூபா முஃப்தி, கற்பழிப்பு குற்றவாளிகளுக்காக ஆஜராகுபவர்களுக்கு பதவிகள் வழங்கி கவுரவிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். பாஜகவின் இந்த செயல் நாட்டில் பரவி வரும் கற்பழிப்பு கலாச்சாரத்தை மேலும் அதிகப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கற்பழிப்பு வழக்கில் மிகவும் உறுதியான ஆதாரமாக கருதப்பட்டு வந்த சிறுமியின் முடி மாதிரிகள் தற்போது மாயமாகியுள்ளது. இந்த முடி மாதிரிகள் வைக்கப்பட்டிருந்த உரைகள் நீதிமன்றத்தில் திறக்கப்பட போது அவை காலியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுடன் தற்போதைய இந்த வழக்கறிஞரின் பதவி உயர்வு மூலம் பாஜக என்ன செய்தியை வெளியிப்படுத்த முனைகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Comments are closed.