ஆசிஃபா வழக்கை தொடக்கம் முதலே முன்னின்று நடத்தி வந்த வழக்கறிஞர் மீது உத்தம்பூரில் பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல்

0

ஆசிஃபா வழக்கை தொடக்கம் முதலே முன்னின்று நடத்தி வந்த வழக்கறிஞர் மீது உத்தம்பூரில் பாஜக ஆதரவாளர்கள் தாக்குதல்

ஜம்மு கஷ்மீரில் மதவெறியர்களால் கூட்டு வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட ஆசிஃபாவிற்கு நீதி வேண்டி தொடக்கம் முதல் களத்தில் இருந்து போராடியவர் வழக்கறிஞர் தாலிப் ஹுசைன். இவரை வெள்ளி இரவு உத்தம்பூரில் வைத்து பாஜக ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் இது வெறும் சிறிய கைகலப்புத்தான் என்றும் பெரியளவிலான தாக்குதல் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21ஆம் தேதி, ஆசிஃபா கொலை வழக்கின் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யமால் இருப்பதை எதிர்த்தும், இந்த வழக்கை காவல்துறை மூடி மறைக்க முயல்வதை கண்டித்தும் கதுவா பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்திய காரணத்தால் இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்ட நிலையில் தான் இவர் விடுவிக்கப்பட்டார்.

ஆசிஃபா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை வழக்கறிஞர்கள் தடுப்பதும், பழங்குடியினருக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை தூண்டிவிட்டு கடையடைப்பு நடத்துவதும் அப்பட்டமான ரவுடித்தனம் என்று கூறியிருந்தார் தாலிப் ஹுசைன். இப்பகுதியில் பல்லாண்டு காலமாக பழங்குடியினர் பிற சமூகத்து மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர் என்று தெரிவித்த அவர், தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி இவர்கள் கோரிக்கை வைப்பது குற்றவாளிகளை பாதுகாக்கவே என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.